றெக்கை கட்டி பறக்கும் தங்கத்தின் விலை.. ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 அதிகரித்து ரூ.26,464க்கும் விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 அதிகரித்து விற்பனையாகி வருகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.3,308க்கும், சவரன் ரூ.26,464க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட்(10 கிராம்) தங்கத்தின் விலை ரூ.34,640க்கும் விற்பனையாகிறது.

இரண்டு நாட்களில் சவரனுக்கு ரூ.1,000 எகிறியது
 

கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகிறது. கடந்த 14ம் தேதி தங்கம் சவரனுக்கு 312 உயர்ந்து 25,288க்கு விற்பனையானது. இந்த மாதத்தின் துவங்கிய பிறகு அதிகபட்ச உயர்வாகவும் இது இருந்தது. அதன்பிறகு தொடர்ந்து சவரன் 25,000த்துக்கு மேல்தான் நீடித்து வருகிறது. கடந்த 15 மற்றும் 17ம் தேதியை தவிர மற்ற நாட்கள் எல்லாம் உயர்வுடனே இருந்து வருகிறது.

அமெரிக்க பெடரல் வங்கி கூட்டமைப்பு வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள் இருந்தனர். ஆனால், இதற்கு மாறாக, பெடரல் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. இதன்காரணமாக சர்வதேச சந்தையில் ஒரே நாளில் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் 35 டாலர் வரை உயர்ந்தது. இதனால் சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு 528 அதிகரித்து கிராம் ₹3,213க்கும், சவரன் 25,704க்கும் விற்கப்பட்டது.

இதை தொடர்ந்து சென்னையில் ஆபரண தங்கம்கடந்த வெள்ளிக்கிழமை சவரனுக்கு 464 உயர்ந்து கிராம் 3,271க்கும் சவரன் 26,168க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், மாலையில் 272 குறைந்து, 25,896 ஆனது. இருப்பினும் காலை நிலவரப்படி 2 நாளில் சவரனுக்கு 1,000 அதிகரித்தது.

மீண்டும் தங்கம் விலை உச்சம்  


இந்நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.344 அதிகரித்து ,சவரன் ரூ.26,464க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.41.40க்கு விற்பனையாகிறது.தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருவதாலும், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாலும் இந்தியாவிலும் தங்கம் விலை உயர்ந்து வருவதாக தங்கம் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : building , Gold, Price, Jewelry, Federal Bank
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...