கடலூர் மாவட்டத்தில் தண்ணீரின்றி காய்ந்த பயிர்கள் கண்டு கலங்கி நிற்கும் விவசாயிகள்

கடலூர்: தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வரும் நிலையில் மற்றொரு பக்கம் விவசாயத்திற்கும் தண்ணீர் இன்றி விவசாயிகள் கலங்கி நிற்கிறார்கள். கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் தாலூக்காவிற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

மின்மோட்டார்கள் மூலம் விளைநிலங்களுக்கு பாய்ச்சும் தண்ணீராய் நம்பித்தான் இந்த பகுதி மக்கள் வாழ்க்கிறார்கள். விளைநிலத்தில் இயங்கும் மின் மோட்டாரின் தண்ணீரை பிடித்து வைத்து பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது அதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மும்முனை மின்சாரம் சரிவர வழங்காத நிலையில் மலை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் விளைநிலங்களுக்கும் மின்மோட்டாரை பயன்படுத்தி தண்ணீரை பாய்ச்ச முடியாத நிலைக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர்.

இதனால் நெற்பயிர்கள் காய்ந்து  பச்சை பசேலுன்னு காட்சியளிக்ககூடிய விளைநிலங்கள் வெடித்து வறண்ட பாலைவனமாக மாற துவங்கிவிட்டன. விருதாச்சலத்தை சுற்றியுள்ள சாத்துகூடல், இளமங்கலம், ஆழிச்சிக்குழி, மணவாளநெல்லூர் ஆகிய கிராமங்களில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாலைவனமாக மாறும் சூழல் உருவாகியுள்ளது.

வேறு வழியின்றி விவசாய விளைநிலங்களில் மாடுகளைவிட்டு மேய்க்கும் அவளை நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். பயிர்கள் கருகியதால் நட்டத்தை சந்தித்துள்ள விவசாயிகள் இதே நிலை தொடர்ந்தால் சம்பா சாகுபடி செய்யமுடியாத சூழ்நிலை ஏற்படும் என வேதனையுடன் தெரிவித்தனர்.

× RELATED விவசாயிகளுக்கு அழைப்பு...