யானைகள் நடமாட்டத்தால் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை... கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்

கொடைக்கானல்: யானைகள் நடமாட்டத்தால் கொடைக்கானல் பேரிஜம் ஏரி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்து வருகின்றனர். மலைகளின் இளவரசியான திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இங்கு வருபவர்கள் அடர்ந்த வனப்பகுதியின் நடுவில் அமைந்துள்ள பேரிஜம் ஏரி, மதிகெட்டான் சோலையை கண்டுரசிக்க அதிகளவு விரும்புகின்றனர். இங்கே செல்வதற்கு கொடைக்கானல் வனத்துறை அலுவலகத்தில் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

கடந்த சில நாட்களாக பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் யானை கூட்டம் அங்கிருந்து செல்லும் வரை இந்த தடை நீடிக்கும் என வனத்துறை தெரிவித்துள்ளது. இதனால் பேரிஜம் ஏரியை காண்பதற்காக அனுமதி வாங்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Tags : Berijam Lake ,Kodaikanal , Kodaikanal, Elephants
× RELATED டாப்சிலிப்பில் யானைகளுக்கு பொங்கல்...