×

கிணற்றில் மழைநீரை சேகரித்து கிராம மக்களுக்கு நாள்தோறும் 10,000 லிட்டர் குடிநீர் விநியோகம்: இயற்கை விவசாயி காசிராமன்

சீர்காழி: தண்ணீர், தண்ணீர் என்று பலரும் தத்தளித்த நேரத்தில் மழைநீரை சேகரித்து கிராம மக்களுக்கு நாள்தோறும் 10,000 லிட்டர் குடிநீர் கொடுத்து வருகிறார். சீர்காழியை சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவர் மழைநீர் சேகரிப்பின் மகத்துவத்தையும் அவசியத்தையும் உணர்த்துகிறார். தண்ணீரை ஆபத்தில் இருந்து பெறவேண்டும் பூமியில் தேடக்கூடாது என இயற்கை வேளாண் விஞ்சானி நம்மாழ்வார் கூறினார்.

இதுபோன்ற இயற்கை சார்ந்த கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவன்காக்கை சேர்ந்த காசிராமன் என்பவர் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார். பூமிக்கு நாம் கொடுப்பதையே அது திருப்பி தரும் என்ற முதுமொழிக்கு ஏற்ப மழைநீரை  கிணற்றில் சேகரிக்க தொடங்கிய காசிராமன் தண்ணீர் தட்டுப்பாடு என்பது தனக்கு இல்லவே இல்லை என்கிறார்.

தனது கிணற்றில் இருந்து எடுத்து சுத்திகரிக்கப்பட்ட நீரை சுற்றுவட்டார கிராமங்களுக்கு நாள்தோறும் 10,000 லிட்டர் வரை குடிநீரை விலையின்றி காசிராமன் விநியோகம் செய்கிறார். மேலும் கோட்டை வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ள வெந்தயம், கருஞ்சீரகம் கலந்து குளிர்ச்சியான தண்ணீரை வழங்கி வருகிறார். தனது வீட்டின் கிணற்றில் மலை நிறை சேகரித்து விநியோகித்து வந்த இவர் தனது சொந்த இடத்தில் பெரிய அளவில் கிணறு ஒன்றையும் தோண்டி வருகிறார். மேலும் கிராமப்புறங்களில் பாழடைந்து கிடக்கும் கிணறுகளையும் சுத்தப்படுத்தி மழைநீரை சேமிக்கும் வகையில் மாற்றி வருகிறார்.

இவருக்கு உறுதுணையாக பணியாற்றிவரும் விவசாயி லியோ என்பவர் சென்னையில் தான் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடுகிறார். சென்னையில் வீடு கட்ட தொடஙங்கும் முன்னர் அந்த இடத்தில் இருக்கும் கிணறுகளை துர்க்க சொல்வார்கள் என்றும் அப்படி தூர்த்ததற்கு பிராயச்சித்தமாக தற்போது கிணறுகளை வெட்டி வருவதாகவும் விவசாயி லியோ குறிப்பிடுகிறார். பறவைகளும், கால்நடைகளும் காசுக்கொடுத்தா தண்ணீர் வாங்க முடியும் என்று கேள்வி எழுப்பும் காசிராமனின் விருப்பம் நீர்நிலைகளை பாதுகாக்க ஒவ்வொரு மனிதனும் முன்வர வேண்டும்  என்பதாகும்.


Tags : well , Well, collecting rain water, villagers, drinking water, distribution, natural farmer, kasiraman
× RELATED “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை...