×

சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக எப்படி எதிர்கொள்ளும்?: துரைமுருகன் பேட்டி

சென்னை: சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக எப்படி எதிர்கொள்ளும் என்பதை எதிர்கொண்ட பிறகு தெரிந்து கொள்ளுங்கள் என்று துரைமுருகன் கூறினார்.சென்னை, தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வெளியே வந்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:திமுக சார்பில் அலுவல் ஆய்வு கூட்டத்தின் உள்ளே பேசிய, வலியுறுத்திய விஷயங்களை வெளியே சொல்லக்கூடாது. அதுதான் மரபு. இந்த ஆட்சியை அகற்றுவோம் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நடைபெறும் முன்பே கூறி இருந்ததாக கேட்கிறீர்கள். அதெல்லாம் பொறுத்திருந்து பாருங்கள். நாங்கள் பத்திரிகைகளிடம் விளக்கத்தை சொல்லிவிட்டு நாங்கள் என்னென்ன பண்ண போகிறோம் என்கிற சொல்கிற செய்தியா இது? அதெல்லாம் என்ன செய்வோமோ அதை நிச்சயம் செய்வோம்.

சபாநாயகர் மீது நாங்கள் (திமுக) கொடுத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை எப்படி எதிர்கொள்வோம் என்பதையும் நாங்கள் எதிர்கொண்ட பிறகு தெரிந்து கொள்ளுங்கள். சட்டமன்றத்தில் என்னென்ன பிரச்னைகளை முன்வைத்து பேசப்போகிறோம் என்பதை இப்போதே நாங்கள் சொல்ல மாட்டோம். அவர்கள் தயாராகி விடுவார்கள். சட்டமன்ற கூட்டம் ஜூலை 30ம் தேதி வரை நடைபெறுவது போதிய நாட்கள்தான். இரண்டு மாதம் வைத்தாலும் அவ்வளவுதான் பண்ணுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.




Tags : DMK ,Speaker , Speaker Tanabal, Confidence ,resolution,DMK,Duraimurugan
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்