×

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு: அதிகாரிகள், வல்லுனர்கள் பங்கேற்பு

சென்னை: சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மெட்ரோ ரயில் நிலையங்களில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு  உட்புற பகுதிகள், வெளிப்புற பகுதிகள், டிக்கெட் கவுன்டர்கள், பிளாட்பாரம்கள் என அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை நிர்வாகம் அமைத்துள்ளது.

இதேபோல், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த 3ம் தேதி மூதாட்டி ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர் செயின் பறித்த சம்பவமும் அரங்கேறியது. மேலும், கடந்த சில நாட்களுக்கும் முன்பு கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில்  பள்ளி மாணவன் ஒருவனும் தற்கொலை செய்துகொண்டான். இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையங்களில் குப்பை தொட்டிகள் தொடர்ந்து திருடு போகும் சம்பவங்களும் நடந்தது. எனவே, தொடர்ந்து  இதுபோன்று நடைபெறும் அம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களையும் தீவிர ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நேற்று சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுரங்கபாதைக்குள் அமைந்துள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு அம்சங்களையும் பார்வையிட்டனர். இதேபோல், ஒவ்வொரு மெட்ரோ  ரயில் நிலையங்களையும் தொடர்ந்து ஆய்வு செய்து பின்னர் தலைமை அலுவலகத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளனர்.


Tags : Experts , Central, Metro Railway Station, Security features, Officers ,Experts
× RELATED கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பினால்...