×

ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியான விவகாரம் அமமுகவில் இருந்து தங்கதமிழ்ச்செல்வனை நீக்க முடிவு?

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை தங்க தமிழ்ச்செல்வன் ஆபாசமாக வசைபாடும் ஆடியோ வெளியானதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்க தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன், கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை ஆபாசமாக வசைபாடும் ஆடியோ நேற்று வெளியானது. இது அமமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதையடுத்து, சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் டிடிவி.தினகரன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதில், தேனி மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது, தங்க தமிழ்ச்செல்வனை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கு நிர்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக சம்மதம் தெரிவித்ததால், தங்க தமிழ்ச்செல்வன் கூடிய விரைவில் கட்சியில் இருந்து நீக்கப்பட  உள்ளதாக தெரிகிறது. இதேபோல், அவர் வகித்த கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பை ஓசூரில் வேட்பாளராக போட்டியிட்ட புகழேந்தியிடம் ஒப்படைக்க தினகரன் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.




Tags : Porn talk, audio issue,gold bullion?
× RELATED வெகுஜன விரோதியாக உலக மக்களால்...