×

சேந்தமங்கலத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில், குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே, நடுக்கோம்பை பகுதியில் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 மாதமாக இப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து, பலமுறை  ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை. இதனால், இப்பகுதி மக்கள், அருகில் உள்ள விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். தற்போது, கிணறுகளிலும் தண்ணீர் வற்றி விட்டதால், விவசாய  தோட்டத்திற்குள் செல்லவே விவசாயிகள் அனுமதி மறுத்து வருகின்றனர். இதுகுறித்து மீண்டும் ஊராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

 இதனால், ஆத்திரமடைந்த பெண்கள் 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை காலி குடங்களுடன் நடுகோம்பை பஸ் ஸ்டாப் பகுதியில் திரண்டனர். பின்னர், திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த  சேந்தமங்கலம் ேபாலீசார், ஊராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநியோகத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால், சுமார் ஒரு மணி  நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.




Tags : Women ,Senthamangalam , Asking , Drinking Water , Sendamangalam, Girls stir
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...