காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுபாக்கத்தில் 2.43 கோடி செலவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: காஞ்சிபுரம், வேலூர், தூத்துக்குடி மாவட்டங்களில்₹4.52 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம், 3 உயர்மட்ட பாலங்களை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்.காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பயன்பாட்டிற்காக ரூ.2 கோடியே 43 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வீடியோ கான்பரன்சிங்  மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், பேர்ணாம்பட்டு - ஓங்குப்பம் சாலையில்  கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், பருவக்குடி வேம்பார் - ராமனூத்து  சாலையில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் மற்றும் புதூர் ஊராட்சி ஒன்றியம், மாவிலோடை சாலையில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் என மொத்தம் ரூ.4 கோடியே 52 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக  கட்டிடம் மற்றும் 3 உயர்மட்ட பாலங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வேலுமணி, பென்ஜமின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தை வறட்சி...