புது மாப்பிள்ளை விபத்தில் பலி

சென்னை:பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் வசித்தவர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வகணேஷ் (30). திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் கார் உதிரிபாகம் தயாரிக்கும் கம்பெனியில் சூபர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது. தேவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், செல்வ கணேஷ் அரியலூருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்றார். அங்கிருந்து, தனது தந்தை அன்பழகனுடன் (60), பைக்கில் நேற்று காலையில் சென்னைக்கு புறப்பட்டார். கூடுவாஞ்சேரி அருகே ஜிஎஸ்டி சாலையில், நேற்று மாலை சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதில் செல்வகணேஷ் பரிதாபமாக இறந்தார். அவரது தந்தை அன்பழகன் காயத்துடன் உயிர் தப்பினார்.

× RELATED புது மாப்பிள்ளை விபத்தில் பலி