×

சீர்காழி அருகே மண்ணியாறு கரையை உடைத்து எரிவாயு குழாயை பதிக்க முயற்சி: விவசாயிகள் எதிர்ப்பால் பணி பாதியில் நிறுத்தம்

சீர்காழி:  நாகை மாவட்டம் சீர்காழி அருகே  பழையப் பாளைத்திலிருந்து கெயில் நிறுவன உதவியுடன் ஓஎன்ஜிசி நிறுவனம் எரிவாய்வு எடுத்து செல்வதற்காக முதற்கட்டமாக பழைய பாளையத்திலிருந்து மேமாத்தூர் வரை சுமார் 29 கிலோ மீட்டர் தூரம் குழாய் புதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக விளைநிலங்களில் பள்ளம் தோண்டி குழாய்கள் புதைக்கப்பட்டு வருகின்றன. இதனால் நெற்பயிர்கள், கரும்பு, பருத்தி, தென்னை, மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் போலீஸ் உதவியுடன் குழாய் புதைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் சீர்காழி, திருவாலி ஏரி அருகே மண்ணியாற்றின் கரையை உடைத்து குழாய் பதிக்கும் பணி நேற்று மாலை தொடங்கியது. இதனை அறிந்த விவசாயிகள் அங்கு திரண்டு மண்ணியாற்றின் கரையை உடைத்து குழாய் புதைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து சிறைபிடித்தனர். இதைத் தொடர்ந்து திருவெண்காடு போலீசார் மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வந்து விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் விவசாயிகள் மண்ணியாற்றின் கரையை உடைத்து குழாய் பதித்தால் தொடர்ந்து மழைக்காலங்களில் அதே இடத்தில் உடைப்பு ஏற்படும்,  அதனால் கரையை உடைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைதொடர்ந்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் அந்த பணியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு சென்றனர்.

Tags : protest , By corruption, earthenware, gas pipeline, farmers protest
× RELATED அர்ஜெண்டினாவில்...