இரவு முழுக்க நடந்த கொடூரம் ஜெய்ஸ்ரீராம் என கோஷமிடச்சொல்லி தாக்கப்பட்ட இளைஞர் பரிதாப பலி

ஜாம்ஷெட்பூர்: ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடச் சொல்லி தாக்கப்பட்ட இளைஞர் பரிதாபமாக இறந்தார். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.  ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் தம்ரேஷ் அன்சாரி (24). சமீபத்தில்தான் இவருக்கு திருமணம் நடந்தது. ஜாம்ஷெட்பூரில் இருந்து கர்சவான் மாவட்டத்தில் உள்ள தத்கிதிஹ் கிராமத்துக்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கிருந்த சிலர் இவர் பைக் திருட வந்ததாக கருதி தாக்கியுள்ளனர். அன்சாரியின் நண்பர்கள் தப்பி விட்டனர்.

பிடிபட்ட அன்சாரியை கடந்த 18ம் தேதி இரவு முழுக்க கம்பத்தில் கட்டி வைத்து கட்டையால் அடித்து துவைத்துள்ளனர். அப்போது ஜெய் ராம், ஜெய் ஹனுமான் என கோஷமிடச்சொல்லி துன்புறுத்தியுள்ளனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்துள்ளனர். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர், 21ம் தேதி சரிகேலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் 22ம் தேதி ஜாம்ஷட்பூரில் உள்ள டாடா மருத்துவமனைக்கு இவரை மாற்றினர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து அன்சாரியின் மனைவி கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Tags : Jaisiram, youth, sacrifice
× RELATED மணிமுத்தாறு கால்வாயில் மூழ்கி வாலிபர் பலி