×

16ம் தேதி இரவு திருப்பதியில் 10 மணி நேரம் நடை அடைப்பு

திருமலை: திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜூலை 17ம் தேதி காலை அதிகாலை 1.31 மணி முதல் 4.29 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 16ம் தேதி இரவு 7 மணி முதல் 17ம் தேதி அதிகாலை 5 மணி வரை 10 மணி நேரம் கோயில் நடை அடைக்கப்பட உள்ளது. பின்னர் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாத சேவையுடன் திறக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து தோமாலை சேவை,  பஞ்சாங்கம் படித்து, அர்ச்சனை போன்ற சேவைகள் ஏகாந்தமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் அர்ச்சகர்கள் மட்டும்  நடத்த உள்ளனர். இதைத் தொடர்ந்து 11 மணிக்கு பிறகு சர்வ தரிசனத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதேபோன்று 17ம் தேதி ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவையை ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Tirupati, Tirupati Devasthanam
× RELATED டெல்லி வக்பு வாரிய பணி நியமன முறைகேடு...