அரசு இன்ஜினியரை தோப்புகரணம் போட வைத்த ஒடிசா ஆளுங்கட்சி எம்எல்ஏ கைது கலெக்டருக்கு குவியும் பாராட்டு

புவனேஷ்வர்:  ஒடிசாவில் இளநிலை பொறியாளரை தோப்புகரணம் போட வைத்ததால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜூ ஜனதா தளம் எம்எல்ஏவை போலீசார் கைது செய்தனர். ஒடிசாவில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த வீடியோவில் பட்னாகர் எம்எல்ஏ சரோஜ்குமார் மெஹர் அரசு இளநிலை பொறியாளரை திட்டி, அவரை தோப்புக்கரணம் போடும்படி கூறுகிறார். மக்கள் சூழ்ந்து நிற்க அந்த பொறியாளரும் தோப்புகரணம் போடுகின்றார். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இந்நிலையில் இந்த வீடியோ காட்சி குறித்து விசாரணை நடத்திய கலெக் டர், எம்எல்ஏ சரோஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன் படி பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்து எம்எல்ஏவை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

இதனிடையே தன்னுடைய செயலுக்கு எம்எல்ஏ சரோஜ்குமார் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். மக்களின் கோபத்தை குறைக்க இவ்வாறு நடந்து கொண்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். ஆளுங்கட்சி எம்எல்ஏ என்று பார்க்காமல், நடவடிக்ைக எடுக்க உத்தரவிட்ட கலெக்டருக்கும், நடவடிக்கை எடுத்த போலீசாருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Tags : Governor ,Odisha ,MLA ,Government Engineer ,Arrests Collector for Raising , Government Engineer, Topparkaranam, MLA of Odisha Governance, arrested
× RELATED இலவச அரிசி வழங்க கோரி கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்