×

அமமுகவில் உட்கட்சி பூசல் வெடித்தது டிடிவியை ஆபாசமாக திட்டிய தங்க தமிழ்ச்செல்வன்: ஆடியோ வெளியானதால் பரபரப்பு

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை அக்கட்சியின் முக்கிய நிர்வாகி தங்க தமிழ்ச்செல்வன் ஆபாச வார்த்தைகளால் வசைபாடிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுகவில் இருந்து தினகரனையும், சசிகலாவையும் நீக்கிய பிறகு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்தவர்களில் தங்க தமிழ்ச்செல்வன் முக்கியமான நபராக பார்க்கப்பட்டார். கட்சியின் முக்கிய முடிவுகளில் தங்க தமிழ்ச்செல்வனின் ஈடுபாடு  அதிகமாகவே இருந்தது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அமமுக சார்பில் தேனி தொகுதியில் அவர் போட்டியிட்டார். ஆனால், இத்தொகுதியில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வியை அடைந்தார். தேர்தல் தோல்வியாலும், தலைமையின் மேல் உள்ள அதிருப்தியாலும் தங்க தமிழ்செல்வன் மீண்டும் அதிமுகவிற்கே செல்ல உள்ளதாகவும் தகவல்கள்  வெளியாகியது. இதனால், டிடிவி.தினகரனுக்கும், தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

இந்தநிலையில், டிடிவி.தினகரனை ஆபாச வார்த்தைகளால் தங்க தமிழ்செல்வன் வசைபாடும் ஆடியோ ஒன்று நேற்று மாலையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், தங்க தமிழ்செல்வனும், டிடிவி.தினகரனின்  உதவியாளர் ஜனா(எ) ஜனார்த்தனனும் பேசுகின்றனர். அவர் பேசியதாவது: தங்க தமிழ்செல்வன்: ஹலோ கேக்குதா...இப்போஉதவியாளர்: கேக்குதுண்ணே...கேக்குதுண்ணே சொல்லுங்க.தங்க தமிழ்செல்வன்: எங்க இப்ப அவர்...அண்ணன் இருக்காரா? உதவியாளர்: இல்ல அண்ணே...நான் ஊருக்கு வந்துட்டன்னே...தங்க தமிழ்செல்வன்: இந்த மாதிரி ஒரு பொட்டத்தனமான அரசியல் செய்றத நிப்பாட்ட சொல்லுப்பா...அவன, உங்க அண்ணன.உதவியாளர்: ஏன் அண்ணே. எண்ணன்னே? தங்க தமிழ்செல்வன்: உண்மையிலேயே பொட்டத்தனமான ஒரு அரசியல். நான் வந்து விஸ்வரூபம் எடுத்தேன் என்றால் நீங்கள் அழிந்துபோவீர்கள்... நீ உட்பட அழிந்துபோவ...நான் நல்லவன்.உதவியாளர்: சரிண்ணே...தங்க தமிழ்செல்வன்: தேனி மாவட்டத்தில் கூட்டம் போடுற ...‘பீப் வார்த்தை’.... நாளைக்கு நான் மதுரையில் கூட்டம் போடுறேன் ...‘வெண்ண’...பாரு, என்ன நடக்குதுனு பாரு. ஆனால், இந்த மாதிரி ஒரு பேடித்தனமான அரசியல் பண்ண  வேணாம்னு உங்க அண்ணன்கிட்ட சொல்லு...இந்த மாதிரி அரசியல் பண்ணவேணாம்... நீ தோத்துப்போவ என்னைக்கும் ஜெயிக்க மாட்ட.

இதுபோன்று தொடர்ந்து தங்க தமிழ்செல்வன் டிடிவி.தினகரனை ஆபாச வார்த்தைகளால் வசைபாடிக்கொண்டிருக்கும் போதே பாதியில் ஆடியோ கட் ஆகிறது. இந்த ஆடியோ அமமுக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதனால், கூடிய விரைவில் தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைய உள்ளது உறுதியாகியுள்ளது.இந்த ஆடியோ கடந்த வாரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தங்க தமிழ்செல்வனும், ஜனாவும் பேசியுள்ளனர். அதில் தங்கதமிழ்செல்வன் ஆடியோவை வெளியிடவில்லை. இதனால் தினகரனின் உதவியாளரே ஆடியோவை வெளியிட்டுள்ளார்.  தங்க தமிழ்செல்வனை கட்சியில் இருந்து வெளியேற்ற தருணம் பார்த்து வந்தவர்கள், தற்போது திட்டமிட்டு ஆடியோவை வெளியிட்டுள்ளதாக தங்க தமிழ்செல்வனின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து தங்கதமிழ்செல்வனிடம்  கருத்து கேட்க தொடர்பு கொண்டபோது, அவர் செல்போனை எடுக்கவில்லை.

Tags : Uttarakhand ,clash , Intra-party ,disputes , UPA, Thangi Thamilchelvan
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்