தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறை டுவிட்டர் பக்கத்தை பின் தொடர்ந்த ராகுல் காந்தி: கட்சியினர் உற்சாகம்

சென்னை: தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறை டிவிட்டர் பக்கத்தை ராகுல்காந்தி பின்தொடர்வது கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அஸ்லம் பாஷா. தமிழக காங்கிரஸ் கமிட்டியில் சிறுபான்மை துறை மாநில தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் சிறுபான்மை துறை சார்பில் நடைபெறும் பல்வேறு கோரிக்கை போராட்டங்கள், சோனியா காந்தி, ராகுல் காந்தி பிறந்த நாட்களில் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தல், அன்னதானம் செய்தல்,  ரத்ததான  முகாம்கள் குறித்து தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறை டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வந்தார்.

இந்நிலையில் அகில இந்திய அளவில்  அனைத்து அணிகளின்  அனைத்து துறை டிவிட்டர் பதிவுகளை கவனித்து வந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாடு காங்கிரஸ்  சிறுபான்மை துறையின் செயல்பாடுகள் மற்றும் பணிகள் ஆகியவற்றை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மைத் துறை  மாநில தலைவர் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், ராகுல் தனது பிறந்த நாள் அன்று முதல் இந்தியாவில் உள்ள அனைத்து அணிகளின் டிவிட்டர் பக்கத்தை கவனித்து வந்த அவர்  தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறை டிவிட்டர் பக்கத்தை  பின் தொடர  தொடங்கியுள்ளது காங்கிரசார் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Rahul Gandhi ,Congress , Tamil Nadu Congress Minority Department, Twitter, Rahul Gandhi
× RELATED ஜே.என்.யு. பல்கலை கழகத்தில்...