×

குடிக்கத் தண்ணீர் இல்லாமல் தமிழ்நாடு தவிப்பு: மக்களவையில் கம்யூ., எம்.பி செல்வராஜ் பேச்சு

டெல்லி: குடிக்கத் தண்ணீர் இல்லாமல் தமிழ்நாடு தவித்துக் கொண்டிருப்பதாக மக்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி செல்வராஜ் பேசியுள்ளார். நடுவர் மன்றத் தீர்ப்பை கர்நாடகம் மதிக்காமல் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க மறுக்கிறது என்று செல்வராஜ் எம்.பி தெரிவித்துள்ளார். தண்ணீர் இல்லாத காரணத்தால் விவசாயிகள் உயிரிழந்து வருகிறார்கள், கால்நடைகளும் உயிரிழந்து வருகிறது. சிறுபான்மையினர், பெண்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் பற்றி ஜனாதிபதி உரையில் குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,talks ,Selvaraj , Water, CPI, Selvaraj
× RELATED கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் தர...