3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்களுக்கு கட்டாய பணி மாறுதல்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: பள்ளிக்கல்வி துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்களுக்கு கட்டாய பணி மாறுதல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2016 ஜூன் 30ம் தேதி வரை பணியில் சேர்ந்தவர்களை கட்டாய பணியிட மாற்றம் செய்ய வேண்டும். ஜூலை 3-ல் விருப்பக் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணியிட மாற்றம் வழங்க முதன்மைக்கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : School Department, Directive
× RELATED சேவைகளை அளிக்க முடியாமல் திணறும்...