மேகதாது அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதியை கர்நாடக அரசுக்கு வழங்கக்கூடாது: மோடிக்கு எடப்பாடி கடிதம்

சென்னை: மேகதாது அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதியை கர்நாடக அரசுக்கு வழங்கக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசு மற்றும் காவிரி வடிநில மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணை கட்ட அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். காவிரியில் கர்நாடகம் அணை கட்ட முயற்சிப்பது நடுவர் மன்றம், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று ஏற்கனவே தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கானது அல்ல மேகதாது அணை என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : government ,Karnataka ,Megadadu Dam , Megadadu Dam, Letter, CM
× RELATED தென்பண்ணை நதிநீர்பங்கீடு பற்றி...