ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டு வரும் பணி தொடங்குவதில் தாமதம்

சென்னை: ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டு வரும் பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் பரிந்துரையின் மீது ரயில்வே இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. ரயில்வே ஒப்புதல் அளித்தால் மட்டுமே தண்ணீரை எடுத்து வருவதற்கான பணிகளை தொடங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ரயில்வே ஒப்புதலுக்காக காத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அரசு ஒதுக்கிய ரூ.65 கோடியை விட கூடுதல் நிதி தேவை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Jolarpettai ,Chennai , Jolarpettai, Chennai, rail, water, Delay
× RELATED வத்தலக்குண்டு- நிலக்கோட்டை இடையே சாலை...