×

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 31ம் தேதி வரை நடத்த முடிவு

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூலை 1 முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் பி.தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 28-ம் தேதி  மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், ராதாமணி ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். 29, 30-ம் தேதி அரசினர் விடுமுறை.

ஜூலை 1-ம் தேதி : வனத்துறை, சுற்றுச்சூழல் மானிய கோரிக்கைகள்.
ஜூலை 2-ம் தேதி : பள்ளி கல்வித்துறை, இளைஞர் நலம், மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, உயர்க்கல்வி ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்.
ஜூலை 3-ம் தேதி : கூட்டுறவு, உணவு,
ஜூலை 4-ம் தேதி : எரிசக்தித்துறை, மதுவிலக்கு.
ஜூலை 5-ம் தேதி : மீன்வளம், பணியாளர், கால்நடை பராமரிப்பு, பால்வளம்.
ஜூலை 6, 7-ம் தேதி அரசினர் விடுமுறை.
ஜூலை 8-ம் தேதி :  நகராட்சி, ஊரக வளர்ச்சி, சிறப்புத்திட்டம் செயலாக்குத்துறை.
ஜூலை 9-ம் தேதி : நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள், சட்டத்துறை.
ஜூலை 10-ம் தேதி : சமூகநலம், மாற்றுத்திறனானிகள் நலம், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் நலத்துறை.
ஜூலை 11-ம் தேதி : தொழில்த்துறை, சிறு,குறு, மற்றும் நடுத்தெரு தொழில்கள்.
ஜூலை 12-ம் தேதி : கைத்தெறி மற்றும் துணி நூல், செய்தி,விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை.
ஜூலை 13, 14 -ம் தேதி அரசினர் விடுமுறை.
ஜூலை 15-ம் தேதி : நெடுஞ்சாலைகள், கட்டிடங்கள், பாசனம், பொதுப்பணித்துறை.
ஜூலை 16-ம் தேதி : மக்கள் நல்வாழ்வுத்துறை
ஜூலை 17-ம் தேதி : வேளாண்மைத்துறை
ஜூலை 18-ம் தேதி : சுற்றுலா,கலைபண்பாடு, இந்துசமய அறநிலைத்துறை
ஜூலை 19-ம் தேதி : வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
ஜூலை 20,21 -ம் தேதி அரசினர் விடுமுறை
ஜூலை 22-ம் தேதி : காவல்த்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள்
ஜூலை 23-ம் தேதி : பதிலுரை, வணிகவரிகள், முத்திரைத்தாள்,பத்திரப்பதிவுத்துறை, தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை.
ஜூலை 24-ம் தேதி : தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை, தமிழ் வளர்ச்சித்துறை.
ஜூலை 25-ம் தேதி :நிர்வாகம், போக்குவரத்துத்துறை.
ஜூலை 26-ம் தேதி : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கதர் கிராம தொழில்கள் ஆகிய துறைகள்.
ஜூலை 27,28 -ம் தேதி அரசினர் விடுமுறை.
ஜூலை 29-ம் தேதி : பொதுத்துறை, மாநில சட்டமன்றம், ஆளுனர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, திட்டம் மற்றும் சிறப்பு முயற்ச்சிகள் துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வூதிய காலநன்மைகள்.
ஜூலை 30 -ம் தேதி காலை மேற்கொண்ட துறைகளுடைய பதிலுரையுடன் நிறைவேற்றப்படும். மொத்தம் 23 நாட்கள் சட்டமன்றம் நடைபெறுகிறது. சட்டமன்றம் நடக்கும் எல்லா நாட்களிலும் கேள்வி நேரம் இருக்கும் இன்று தெரிவித்துள்ளார்.


Tags : session ,Tamil Nadu , Tamil Nadu legislative ,scheduled, held from June 28 to July 31
× RELATED செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிப்பு