மேகதாது அணை கட்ட சுற்றுசூழல் அனுமதியை கொடுக்க முடியாது என மத்திய அரசு கூறவேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: மேகதாது அணை பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி, மேகதாது அணை கட்டுவதற்கு தடை உத்தரவு பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கர்நாடக அரசு, மேகதாது அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பது இரு மாநில நல்லுறவுக்கு எந்த வகையிலும் உதவிடாத ஒரு சட்ட விரோத செயல் என விமர்சித்துள்ளார். மேகதாதுவில் புதிய அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு கைவிட வேண்டும்; இது தொடர்பான கர்நாடக அரசின் கடிதத்தை, மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேகதாது அணை காட்டினால்தான் காவிரி நீரை தர முடியும் என கர்நாடகா கூறுவது வெடியாக்கியானது என அவர் கூறியுள்ளார்.


× RELATED மேகதாது அணை கட்ட சுற்றுச்சூழல்...