×

ஆற்காடு அடுத்த வேப்பூரில் படிக்கட்டுகள் சேதமடைந்த பல்லவர் காலத்து அக்னிகுளம்

* சீரமைக்க கோரிக்கை

ஆற்காடு : ஆற்காடு அடுத்த வேப்பூரில் படிக்கட்டுகள் பெயர்ந்து சேதமடைந்த பல்லவர் காலத்து அக்னி  குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆற்காடு அடுத்த வேப்பூரில் பொன்னியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக எதிரே பல்லவர் காலத்தில்  கட்டப்பட்ட அக்னி குளம் உள்ளது.  இந்த குளத்தில் எப்போதும்  தண்ணீர் நிறைந்து காணப்படுவதால் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குளத்தில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி வந்தனர்.

மேலும், இக்கோயிலில் ஆடி மாதம் கூழ் வார்க்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அப்போது பல்வேறு நேர்த்திக் கடன்களை நிறைவேற்றவும், கோயிலில் பொங்கல் வைக்கவும் பொதுமக்கள் குளத்து தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் நிலத்தடி நீர் மட்டம்  வெகுவாக குறைந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லாமல் இந்த குளம் வறண்டு காணப்படுகிறது.

மேலும், குளத்தை சரிவர பராமரிக்காததால் பிளாஸ்டிக் கழிவுகள், குளத்தை சுற்றியுள்ள படிக்கட்டுகளும் சேதமடைந்து காணப்படுகிறது.  தற்போது, ஆடி மாத பெருவிழா தொடங்கவுள்ள நிலையில் குளத்தில் போதுமான தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு குளத்தை தூர்வாரியும், சேதமடைந்த படிக்கட்டுகளை சீரமைத்தும், தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Agnikulam ,Pallavar ,Arcot , Agnikulam ,Pallavar ,Arcad ,Steps ,Request for revamp
× RELATED ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளில்...