×

பொள்ளாச்சியில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கோபாலபுரம் பகுதியில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கோபாலபுரம் பகுதியில் கோழிக்கடை என்ற பெயரில் சட்டவிரோதமாக மது விற்பனையானது நடைபெற்று வருகிறது. மேலும் இப்பகுதி பொள்ளாச்சி மற்றும் தமிழக கேரள எல்லையில் இருக்க கூடிய தேசிய நெடுஞ்சாலை ஆகும். இதை தொடர்ந்து இந்த பகுதியில்  கோழிக்கடை என்ற பெயரில் மூடிய பார் ஒன்று அமைக்கப்பட்டு சட்டவிரோதமான மது விற்பனையானது நடைபெற்று வருகிறது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கடை இருக்க கூடாது என்ற உத்தரவு இருக்கிறது. ஆனால் இந்த சூழ்நிலையில் இந்த இடத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து இதுவொரு எல்லை பகுதி என்பதால் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும்.

ஆனால் இந்த இடத்தில் 24 மணி நேரமும்  சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரியுமா? என்பது கூட தெரியவில்லை. குறிப்பாக ஒரு எல்லை பகுதியில் நடக்கும் சம்பவம் தெரிந்திருந்தும் காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இந்த பகுதியில் பலமுறை புகார் அளிக்கப்பட்டதாகவும் தகவல் வந்துள்ளது. மேலும் இந்த சட்டவிரோத மதுக்கடைக்கு அருகில் ஒரு பள்ளிக்கூடம் மற்றும் மருத்துவமனை உள்ளது. ஆனால் இது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே தற்போதைய தகவலாக உள்ளது. இதையடுத்து சட்டவிரோத மது விற்பனையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pollachi , Coimbatore, Pollachi, 24 hours, Illegal, liquor sales, officials, action, people, demand
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!