திருவண்ணாமலையில் அக்னி முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை

* பொதுமக்கள் அவதி

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் அக்னி முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். திருவண்ணாமலையில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அக்னி நட்சத்திரம் முடிந்து 25 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் வெயிலின் தாக்கம் திருவண்ணாமலையில் குறையவில்லை. மாலை 4 மணிக்கு கூட வெயில் சுட்டெரிக்கிறது.

நேற்று 102.4 டிகிரி வெயில் சுட்ெடரித்தது. அனல் காற்று வீசியது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிணறுகள், குளங்கள், நீச்சல் குளங்களில் குளித்து வெயிலின் தாக்கத்தை தணித்து கொண்டனர். திருவண்ணாமலை பைபாஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கானல் நீர் தென்பட்டது.

Tags : fire ,Thiruvannamalai , Tiruvannamalai ,Agni Natchathiram,Summer ,Heat , hot
× RELATED 100 நாள் திட்டத்தில் ரூ.12 கோடி மோசடி?:...