சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர தீவிரம்: நாள் ஒன்றுக்கு 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு வர முடிவு

வேலூர்: ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரம் பணிகள் தோய்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இரண்டு வாரங்களில் இதற்கான பணிகள் முடிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 1 கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டுவரப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து சென்னை குடிநீர் வாரியம், வேலூர் மாவட்ட குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ரயில்வே அதிகாரிகள் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் மற்றும் நகர பகுதிகளில் ஆய்வு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து ஓரிரு நாட்களில் அரசுக்கு அறிக்கை அளிக்கப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையம், பார்சம்பேட்டை ரயில்வே கேட் அருகே உள்ள ரயில்வே பள்ளி பின்புறம் ஆகிய இரண்டு இடங்களை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். இதையடுத்து குறிப்பாக பார்சம்பேட்டையில் உள்ள தரை நீர் தேக்க தொட்டியில் மேட்டூர் கூட்டு குடிநீர் திட்ட தண்ணீரை நிரப்ப முடிவு செய்துள்ளனர். இதை தொடர்ந்து அங்கிருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் உள்ள குழாய்கள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து ரயில் வேக்கங்கள் மூலம் ஏற்றி சென்னைக்கு கொண்டு வருவது எளிதாகும்.


Tags : Chennai , Vellore, Chennai, train, water, intensity, per day, 1 crore, liter, water, bring, results
× RELATED எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு:...