பவானி சாகர் அணைப்பகுதியில் தஞ்சமடைந்துள்ள ஆயிரக்கணக்கான பறவைகள்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணைப்பகுதியில் ஆயிரக்கணக்கான பறவைகள் தஞ்சம் அடைந்துள்ளன. அவை வானில் பறக்கும் காட்சி அப்பகுதி மக்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. பவானிசாகர் அணையின் நீர்தேக்கப்பகுதி, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், நீலகிரி கிழக்கு சரிவு வனப்பகுதி ஆகியவற்றை ஒட்டி அமைந்துள்ளதாள் வன விலங்குகள் தண்ணீர் தேடி அணைப்பகுதிக்கு வருவது வழக்கம்.

இந்த நிலையில் தண்ணீர் மற்றும் இரை உள்ளிட்ட தேவைகளுக்காக ஆயிரக்கணக்கான பறவைகள் பவானி சாகர் அணையில் தஞ்சம் அடைந்துள்ளனர். பகல் முழுவதும் இறை தேடும் பறவைகள் மாலை வேளைகளில் தங்கள் இருப்பிடம் நோக்கி வானில் பறந்து செல்லும் காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது.


Tags : Bhavani Sagar Dam , Bhavani Sagar Dam, Asylum, Thousands, Birds
× RELATED திருச்சி பிரபல நகைக்கடையில் 13 கோடி...