மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்தவில்லை; தங்கள் பதவியை காப்பாற்றவே யாகம் நடத்தினர்: ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை உடனடியாக தமிழக அரசு போக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். குடிநீர் தட்டுப்பாட்டை போக்காத தமிழக அரசை கண்டித்து சென்னையில் ஸ்டாலின் தலைமையில் திமுக-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் பேசி வரும் ஸ்டாலின் கூறியதாவது, குடம் இங்கே, குடிநீர் எங்கே? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார். மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்தவில்லை; தங்கள் பதவியை காப்பாற்றவே யாகம் நடத்தினர் என குற்றம் சாட்டினார். தண்ணீர் எங்கே, தண்ணீர் எங்கே என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் குரலாக உள்ளது என கூறினார். நிதி, நீதி,நேர்மை, சட்டம் ஒழுங்குக்கும் பஞ்சம்; இப்பொது தண்ணீருக்கும் பஞ்சம் என ஸ்டாலின் கூறினார். தண்ணீர் பஞ்சத்தை பற்றி முதல்வர், துணை முதல்வர் கவலைபடவில்லை என குற்றம் சாட்டினார்.


Tags : AIADMK ,Stalin , DMK, demonstration, Stalin, Speech, AIADMK, Yagam
× RELATED அதிமுக யார் கையிலும் இல்லை; மக்கள்...