ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனிதச்சங்கிலி போராட்டம்: திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்பு

விழுப்புரம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்தில் தன்னெழுச்சியாக 3 லட்சம் பேர் பங்கேற்றனர். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான அனுமதி ரத்து, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து சுமார் 600 கிலோமீட்டர் நீளத்திற்கு மக்கள் கரம் கோர்த்து நின்ற இந்த போராட்டத்தில் திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் இடதுசாரி கட்சியினர் பங்கேற்றனர். இதை தொடர்ந்து விளைநிலங்கள் வீணாவதை தடுக்கவும், கடலில் மீன் வளத்தை பாதுகாக்கவும் வலியுறுத்தி விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மனிதச்சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும் திட்டத்தின் விளைவுகளை உணர்ந்த பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர் கூறியதாவது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் கடலூர் மாவட்டத்தில் இருக்க கூடிய பல ஆயிரக்கணக்கான நிலங்கள் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், மேலும் இந்த இத்திட்டம் கொண்டுவரப்பட்டால் காடுகள் அழியும் சூழ்நிலை உருவாகும் என்பதினால் இத்திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேறினால் தமிழ்நாடு பாலைவனமாகும், தமிழர்கள் அகதிகள் ஆவார்கள் என்று அரசியல் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். ஆகவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Tags : parties ,Mathimukha ,DMK , Villupuram, hydrocarbon project, human chain struggle, DMK, MIDF, party, participation
× RELATED 100 நாள் திட்டத்தில் ரூ.12 கோடி மோசடி?:...