×

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை 38% குறைவு: வானிலை மையம் தகவல்

சென்னை: தென்மேற்கு பருவமழை தற்போதைய நிலவரப்படி 38 சதவீதம் அளவிற்கு குறைவாக பெய்திருப்பதால் இந்தியாவின் பாதி மாநிலங்கள் தண்ணீர் தட்டுப்பாடு நீடிப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் 51 சதவிகித இடங்களில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை பெய்த மழையை விட இந்த ஆண்டு மழையின் அளவு குறைந்துள்ளது. மேலும் அணைகளில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் குடிநீருக்காக மட்டும் பயன்படுத்தப்படும் நிலை இருப்பதால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தென்னிந்தியாவில் தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் இருக்கும் நீர் நிலைகள் தொடர்ந்து வறண்ட நிலையில் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கடந்த ஆண்டு 107 மி.மீட்டர் மழை பெய்திருந்த நிலையில் இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 38 சதவீதம் மழை அளவு குறைந்துள்ளது. மேலும் இதுவரை 65 மி.மீட்டர் மட்டுமே பெய்திருப்பதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. இதை தொடர்ந்து இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் ஆண்டுதோறும் பெய்யும் மழையின் அளவு தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : India , Chennai, India, Southwest Monsoon, 38%, Decline, Weather Center, Info
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...