மனோஜ் திவாரிக்கு கொலை மிரட்டல்

புதுடெல்லி: மாநில பாஜ தலைவரும், மக்களவை உறுப்பினருமான மனோஜ் திவாரியின் செல்போனுக்கு கொலை மிரட்டல் எஸ்எம்எஸ் வந்துள்ளது. திவாரியின் செல்போனுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அந்த எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில் ‘உச்சகட்ட நெருக்கடி அளிக்கப்படுவதால், உங்களை கொலை செய்ய முடிவு செய்துள்ளேன்’ என மர்ம நபர் மிரட்டல் விடுத்து உள்ளார். அதோடு, ‘தேவைப்பட்டால் பிரதமரையும் தீர்க்க வேண்டிவரும்’ எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொலை மிரட்டல் குறித்து போலீசுக்கு திவாரி தகவல் தெரிவித் துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags : death ,Manoj Tiwari , Manoj Tiwari,Threatened to kill
× RELATED தீக்குளித்த மெக்கானிக் சாவு