உ.பி.யில் விவசாயி சுட்டுக்கொலை

முசாபர்நகர்:  உத்தரப் பிரதேசத்தில் மர்ம நபர்களால் விவசாயி சுட்டுக் கொல்லப்பட்டார்.  உத்தரப் பிரதேசம், ஷாம்லி மாவட்ம் ஜலாலாபாத் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பப்லு(38). இவர் நேற்று முன்தினம் தனது விவசாய நிலத்திற்கு சென்றுவருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றதாக தெரிகிறது.

அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.  இரவு நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை உடலில் குண்டு பாய்ந்த நிலையில் தனது நிலத்தில் அவர் இறந்து கிடந்தார்.  இதனை பார்த்த குடும்பத்தினர், போலீசாருக்கு தகவல் ெதரிவித்தனர். அங்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயி சுட்டுக் கொல்லப்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.


Tags : UP , Farmer shot dead , UP
× RELATED வீடு புகுந்து விவசாயி மீது தாக்குதல்