×

பீகாரில் மழை பெய்ததால் மூளைக்காய்ச்சல் ஓடியது : புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை

பாட்னா: ‘பீகாரில் பருவமழை தொடங்கி உள்ளதால் மூளைக்காய்ச்சல் நோய் பாதித்ததாக புதிதாக எந்த நோயாளியும் வரவில்லை’ என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் மூளை காய்ச்சல் நோயால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 1ம் தேதி முதல் இந்த நோயால் பாதிக்கப்பட்டு 600 குழந்தைகள், சிறுவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 149 பேர் பலியாகினர்.  முசாபர்பூர் மாவட்டத்தில் மட்டும் 430 சிறுவர்கள் மூளைகாய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 109 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பீகாரில் பருவமழை தொடங்கியது.

இதன் காரணமாக, மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புதிதாக எந்த நோயாளியும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது பற்றி கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் சுனில் குமார் சாஹி கூறுகையில், “கோடை வெயில் உச்சத்தில் இருந்ததால் மூளைக்காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தது. மழை பெய்வதற்கு முன்பாகவே, இந்நோயால் பாதிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது. மழை தொடங்கிய பிறகு, இந்நோயால் பாதிக்கப்பட்டு புதிதாக யாரும் சிகிச்சைக்கு வரவில்லை. சிகிச்சை பெற்று வருபவர்களும் குணமடைந்து வீட்டுக்கு செல்கின்றனர்,” என்றார். 


Tags : Rainfall ,floods ,Bihar ,newcomers , Rainfall ,Bihar floods,No newcomers affected
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!