தமிழக முன்னாள் டிஜிபி வி.ஆர்.லட்சுமிநாராயணன் மறைவு : உயர் அதிகாரிகள் நேரில் மரியாதை

சென்னை: தமிழக காவல் துறையில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி. வி.ஆர்.லட்சுமிநாராயணன் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். சென்னை அண்ணாநகர் 3வது முதன்மை சாலை 7வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வி.ஆர்.லட்சுமி நாராயணன் (91). இவர் தமிழக கேடரில் கடந்த 1951ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக மதுரையில் தனது பணியை தொடர்ந்தார். பின்னர் காவல் துறையில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த அவர் தமிழக சட்டம் ஒழுங்க டிஜிபியாகவும் பணியாற்றினார்.

பிறகு கடந்த 1970 முதல் 1980 வரை டெல்லியில் சிபிஐயில் பணியாற்றினார். முதுமையால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று காலை அவரது வீட்டில் காலமானார். அவரது உடலுக்கு தமிழக காவல் துறையை ேசர்ந்த உயர் அதிகாரிகள் நேரில் ெசன்று மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து அவரது உறவினர்கள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்கள் வந்த பிறகு தான் உடல்  நல்லடக்கம் செய்ய உள்ளதாக அவரது உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Death ,DGP ,VR Lakshminarayanan , Death of former, DGP VR Lakshminarayanan
× RELATED மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு...