×

திருவெறும்பூர் அருகே திருச்சி கஸ்டம்ஸ் ஊழியர், மனைவி, மகளுடன் பலி

திருவெறும்பூர்: திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள கஸ்டம்ஸ் குடியிருப்பை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (45). இவர், கஸ்டம்சில் எலக்ட்ரிஷியனாக பணிபுரிந்து வந்தார். இவர் பூலாங்குடியில் உள்ள தனது அண்ணன் இல்ல விழாவுக்கு மனைவி வினிதா (34), மகன் ராகுல் (13), மகள் ராஜ (8) ஆகியோருடன் பைக்கில் வந்தனர். விழா முடிந்ததும் ராகுலை பஸ்சில் ஏற்றி அனுப்பிவிட்டு பைக்கில் ஊருக்கு கொண்டிருந்தனர்.
புதுக்கோட்டையில் இருந்து துப்பாக்கி தொழிற்சாலை-கும்பக்குடி பிரிவு சாலை அருகே ஒரு கார், ராமச்சந்திரனின் பைக் மீது மோதியது. இதில் ராமசந்திரன், வினிதா, ராஜ ஆகிய 3 பேரும் இறந்தனர்.

Tags : Trichy Customs , Trichy Customs employee killed, wife, daughter
× RELATED இலங்கையில் இருந்து படகில் கடத்தி...