×

திருவண்ணாமலை அருகே மழை பெய்ய வேண்டி நூதன வழிபாடு

கண்ணமங்கலம்:  தமிழகத்தில் பருவழை பொய்த்ததால் கடும் வறட்சி ஏற்பட்டு பொதுமக்கள் குடிநீருக்காக அல்லல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த விளாங்குப்பம் கிராம மக்கள் நேற்று மழை வேண்டி நூதன வழிபாடு செய்தனர். இதற்காக அருகே உள்ள வனப்பகுதிக்கு நடைபயணமாக சென்றனர். அடர்ந்த வனப்பகுதியில் மழை வேண்டி மாரியம்மனுக்கு களி, கருவாட்டு குழம்பு படையலிட்டு சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து, சிறுவர்களை சடலம்போல கிடத்தி, மழையின்றி மனிதர்கள் மடிகிறார்கள் எனக்கூறி ஒப்பாரி வைத்து அழுதனர். பின்னர், வனதேவதை, வருண பகவானுக்கு தனித்தனியே வழிபாடுகள் நடத்தினர். அப்போது, சிலருக்கு அருள் வந்து மழை பொழியும் என அருள்வாக்கு கூறினர். தொடர்ந்து அனைவருக்கும் களி, கருவாட்டு குழம்பு விருந்து வழங்கப்பட்டது.

Tags : Thiruvannamalai , New worship ,rain , Thiruvannamalai
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...