ராஜேந்திரபாலாஜி சொல்கிறார் உள்ளாட்சி தேர்தல் இப்போது இல்லை

சிவகாசி:  தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். மக்களவை தேர்தல் தோல்வியால் உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ‘‘தமிழகத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க, முதல்வர் அமைச்சர்களை முடுக்கிவிட்டுள்ளார். குடிநீர் தட்டுப்பாடு இல்லாத மாவட்டமாக விருதுநகரை வைத்துள்ளோம்.

மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில்தான் எங்கள் கவனம் உள்ளது. அதனால், தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்த சிந்தனை இல்லை. அதேநேரத்தில் எந்த தேர்தலையும் எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. மழை பெய்ய வேண்டி நாங்கள் யாகம் நடத்துகிறோம். எம்ஜிஆர் மூகாம்பிகை கோயிலில் சாமி கும்பிட்டார். ஜெயலலிதாவும் திருப்பதி உள்ளிட்ட அனைத்து கோயில்களுக்கும் சென்றார். எங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு’’ என்றார்.

Tags : Rajendrapalaji ,election , Rajendrapalaji ,no local election now
× RELATED சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர...