மெட்ரோ ரயில் நிலையங்களில் குப்பை தொட்டிகள் திருட்டு: துப்புரவு பணியாளர்கள் புகார்

சென்னை: சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தின் உள்ளே கடந்த 3ம் தேதி அமெரிக்க வாழ் இந்திய மூதாட்டி ஒருவரிடம் ஆறரை சவரன் நகையை மர்ம நபர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து போலீசார் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தின் உள்ளே இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது சில கேமராக்கள் சரிவர பொருத்தப்படாமலும், மர்ம நபரில் உருவம் சரிவர பதிவாகாமலும் இருந்தது. இதனால், மெட்ரோ ரயில்வே அதிகாரிகளுக்கு கண்காணிப்பு கேமராக்களை சரிவர பொருத்துமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யுமாறு நிர்வாகம் உத்தரவிட்டது. இந்தநிலையில், பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வெளியில் உள்ள குப்பை தொட்டிகளை மர்ம நபர்கள் திருடி செல்வதாக துப்புரவு தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தின் வெளியே இருந்த குப்பை தொட்டிகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் எடுத்துச்சென்றுள்ளனர். மெட்ரோ ரயில் நிலையங்களில் இரும்பினால் ஆன குப்பை தொட்டிகளையே வைப்பது வழக்கம். அதன்படியே அங்கு வைக்கப்பட்டது. இதுபோன்ற திருட்டிற்கு பிறகு அங்கு இரும்பு குப்பை தொட்டிகளை வைப்பது இல்லை. பிளாஸ்டிக் தொட்டிகளே வைக்கப்படுகிறது. கண்காணிப்பு கேமராக்களை சரிவர அனைத்து இடங்களிலும் பொறுத்த வேண்டும். அப்போது தான் இதுபோன்ற திருட்டை தடுக்க முடியும். இவ்வாறு கூறினர்.
   


Tags : Garbage theft ,stations , At Metro, Railway , Garbage theft, complain
× RELATED அம்பை நகராட்சி துப்புரவு பணியாளருக்கு சீருடை வழங்கும் விழா