×

குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை

ஆவடி: ஆவடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் அவதியடைந்து வருவதாக தினகரன் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியாகி இருந்தது. இதனையடுத்து, குடிநீர் பிரச்னையை தீர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக கூறி, கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அறிக்கை: ஆவடி மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 608 மினி பவர் பம்புகள், 314 கைப்பம்புகள் மூலம் தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.    ஆழ்துளை கிணறுகள் இல்லாத பகுதியில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. 18, 19, 24, 25 ஆகிய வார்டுகளில் மேல்நிலை தொட்டி மூலம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் ஏற்படும் குடிநீர் பிரச்னையை குறித்து புகார்களை தெரிவிக்க 18004255109 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணை ெபாதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.



Tags : Action ,solve ,drinking water, problem
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...