×

செல்போன் கடையில் திருடிய 3 சிறுவர்கள் கைது

சென்னை: காசிமேடு எஸ்.என்.செட்டி தெருவில் உள்ள செல்போன் கடையை உடைத்து 6 விலை உயர்ந்த செல்போன்கள், லேப்டாப், மெமரி கார்டு ஆகியவற்றை திருடிய கொடுங்கையூர் எழில்நகரை சேர்ந்த பூபதி (19) மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட 3 சிறுவர்களை நேற்று போலீசார் கைது செய்தனர்.
*  மடுவின்கரை மசூதி காலனியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த ஜாகீர் உசேன் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 157 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
* சித்தாலப்பாக்கம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிச்சை (69) என்பவர், நேற்று காலை வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
* தி.நகர் கணபதி தெருவை சேர்ந்த சிக்கந்தர்கான் (58) நேற்று முன்தினம் இரவு மெரினா காமராஜர் சாலையில் நடந்து சென்றபோது, பைக் மோதி படுகாயமடைந்தார். அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
* சூளைமேடு பாரதி நகரை சேர்ந்தவர் ஸ்டெல்லா (35). இவரது கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ஸ்டெல்லா கூலி வேலை செய்து தனது மகனுடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக ஸ்டெல்லாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், வேலைக்கு செல்ல முடியாமல், குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதை திருப்பி கொடுக்க முடியாததால், மன உளைச்சலில் நேற்று வீட்டில் தனது உடலில் மண்ெணண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்தார்.
*  பூந்தமல்லி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராமு (43), நேற்று முடிச்சூர் - தாம்பரம் பிரதான சாலையில் சென்றபோது, தண்ணீர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
* ஜமீன் பல்லாவரம், ராஜாஜி நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (46). பல்லாவரம் நகராட்சி, 8வது வார்டு அதிமுக வட்ட செயலாளர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு தண்ணீர் பிடிக்கும் தகராறில் இவரை சிலர் வெட்டிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த விஜயகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, எம்ஜிஆர் நகர், ஜாகிர் உசேன் தெருவை, சேர்ந்த சரவணன் (எ) ஆர்ட்ஸ் சரவணன் (23), ஜமீன் பல்லாவரம் செல்வ விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த விஜயகுமார் (எ) முள்ளங்கி (19), ஜமீன் பல்லாவரம் துலுக்கானத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த பிரகாஷ் (21), ஜமீன் பல்லாவரம் குவாரி மேட்டு தெருவை சேர்ந்த நவீன்ராஜ் (19) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

குட்கா விற்பனை செய்தவர் கைது
எம்ஜிஆர் நகர், சூளை பள்ளம் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்த  ராஜேஷ் (எ) மிக்கேல் ராஜேஷ் (33) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 50 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Tags : boys ,cellphone shop , 3 boys arrested, stealing, cellphone, shop
× RELATED மஞ்சும்மல் பாய்ஸ் ரூ.200 கோடி வசூல்