×

குட்கா பறிமுதல்

பல்லாவரம்: குன்றத்தூர் போலீசார் நேற்று வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ரோந்து சென்றபோது, அங்குள்ள ஒரு ஓட்டல் முன்பு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, குன்றத்தூர் அடுத்த அலமாதி பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (40), உத்திரபாண்டி (45), வைரபிரகாஷ் (41) ஆகியோரை கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ, 2 பைக்குகள் மற்றும் குட்கா  விற்பனை செய்த ₹2 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Tags : kutka , Confiscation, kutka
× RELATED புதுச்சேரி மத்திய சிறையில்...