×

குடிநீர் வழங்காத அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் திருவான்மியூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன்  தலைமை வகித்தார். இதில், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், வேளச்சேரி எம்எல்ஏ வாகை சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன்   கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.  பின்னர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் இன்றைக்கு மிகப்பெரிய அளவில் குடிநீர் பிரச்னை வாட்டி வதைத்து வருகிறது. தமிழக அரசு சார்பில் தரப்படும் குடிநீர் என்பது சுகாதாரமற்ற முறையில் இல்லை, போதிய அளவில் இல்லை என்கிற புகார் எல்லா இடத்திலேயும்  பரவலாக உள்ளது. இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* இதேபோல்  127வது வட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் குடிநீர் வாரிய அலுவலகம் முன்பு நடந்தது. வட்ட செயலாளர் லோகு தலைமை  வகித்தார். பகுதி செயலாளர் ராஜா, மாவட்ட இணை செயலாளர் பிரபாகர் ராஜா, வட்ட செயலாளர்  மைக்கேல், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* ஆலந்தூர் 162வது வட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம், ஆலந்தூர் எம்.கே.சாலையில் உள்ள நீதிமன்றம் அருகே நேற்று  நடந்தது. வட்ட செயலாளர் சாலமன் தலைமை வகித்தார்.  முன்னாள் கவுன்சிலர் முத்து, வட்ட செயலாளர்கள்  ஜெகதீஸ்வரன், வரதராஜன்  முன்னிலை வகித்தனர். ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன்  கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில், காலி  குடங்களுடன் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், குடிநீர் வழங்க  நடவடிக்கை எடுக்காத தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.  இதில், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.கே. இப்ராகிம்,  நாகராஜ், சோழன், நடராஜன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.




Tags : protests ,DMK ,government , Condemning,government, providing, drinking water
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்