×

கால் இறுதிக்குள் நுழைந்தது ஜெர்மனி: நார்வே முன்னேற்றம்

பாரிஸ்: பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் கால் இறுதியில் விளையாட ஜெர்மனி அணி தகுதி பெற்றது.கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் (ரவுண்ட் ஆப் 16) நைஜீரியா அணியுடன் மோதிய ஜெர்மனி 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. அந்த அணியின் பாப் (20வது நிமிடம்), டாப்ரிட்ஸ் (27’), ஷுல்லர் (82’) ஆகியோர் கோல் அடித்தனர்.  நைஜீரியா வீராங்கனைகள் கடுமையாக முயற்சித்தும் ஒரு கோல் கூட போட முடியவில்லை.

மற்றொரு போட்டியில் நார்வே - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்ததால், பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. இதில்  நார்வே அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று கால் இறுதிக்கு முன்னேறியது.



Tags : Germany ,quarter-finals ,Norway , quarter, Entered Germany, Progress , Norway
× RELATED அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட...