×

பர்மிங்காம் டென்னிஸ் ஆஷ்லி பார்தி அசத்தல்

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற ‘நேச்சர் வேலி கிளாசிக்’ டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்தி சாம்பியன் பட்டம் வென்றார். பரபரப்பான பைனலில் ஜெர்மனியின் ஜூலியா  கோயர்ஜசுடன் (30 வயது, 19வது ரேங்க்) நேற்று மோதிய பார்தி (23 வயது, 2வது ரேங்க்) 6-3, 7-5 என்ற நேர் செட்களில் வீழ்த்தி கோப்பையை முத்தமிட்டார். நம்பர் 1: ஜூலியாவுக்கு எதிராகப் பெற்ற இந்த வெற்றியால், மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் ஜப்பானின் நவோமி ஒசாகாவை பின்னுக்குத் தள்ளிய ஆஷ்லி பார்தி முதல் முறையாக நம்பர் 1 அந்தஸ்தை வசப்படுத்தினார். உலக  தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறிய 2வது ஆஸி. வீராங்கனை என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.
Tags : Birmingham Dennis Ashley Bharti Wave , Birmingham Tennis, Ashley Bharti, Wonder
× RELATED ட்வீட் கார்னர்...