ஹாலே ஓபன் 10வது முறையாக பெடரர் சாம்பியன்

ஹாலே: ஜெர்மனியில் நடைபெற்ற ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் பெல்ஜியம் வீரர் டேவிட் காபினுடன் (28 வயது, 33வது ரேங்க்) நேற்று மோதிய பெடரர் (37 வயது, 3வது ரேங்க்), டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டில் 7-6 (7-2) என வென்று முன்னிலை பெற்றார். அதே  வேகத்துடன் 2வது செட்டில் காபினின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்த பெடரர் 7-6 (7-2), 6-1 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார்.

இப்போட்டி 1 மணி, 23 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ஹாலே ஓபனில் அவர் 10வது முறையாக கோப்பையை முத்தமிட்டது குறிப்பிடத்தக்கது. ஏடிபி டூர் போட்டிகளில் பெடரர் வென்ற 102வது பட்டம் இது. அமெரிக்காவின் ஜிம்மி கானார்ஸ் 109  சாம்பியன் பட்டங்களை வென்று முதலிடத்தில் உள்ளார்.

Tags : Federer ,Halle Open , Halle Open, Federer, Champion,10th time
× RELATED ஆயிரம் போட்டிகளில் விளையாடி பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ புதிய சாதனை