மாயாவதி வழங்கினார் தம்பி, தம்பி மகனுக்கு பகுஜனில் பெரிய பதவி: பாஜ சதி பற்றி பகீர் குற்றச்சாட்டு

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியில் மாயாவதியின் சகோதரர், அவரது மகனுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.  மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், மாயாவதியின் தம்பி ஆனந்த் குமார், கட்சியின் துணைத் தலைவராகவும், அவருடைய  மகன் ஆகாஷ் ஆனந்த் (24) ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று நடந்த கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் மாயாவதி  பேசுகையில், ‘‘மக்களவைத் தேர்தலில் பாஜ பெற்ற வெற்றியை சந்தேகிக்கும் சூழலில், பிரதமர் மோடி, ஒரே நாடு; ஒரே தேர்தல் குறித்து பேசி வருகிறார். மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதின் மூலம்,  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரே நேரத்தில் மோசடி செய்து வெற்றி பெற பாஜ சதி செய்கிறது’’  என்றார்.

× RELATED காரைக்காலில் பைக் திருடிய சகோதரர்கள் கைது