×

மபி.யில் காங். உட்கட்சி பூசலால் ஆட்சி கவிழ்ந்தால் பாஜ பொறுப்பல்ல: சிவராஜ் சிங் சவுகான் பேச்சு

லக்னோ: `‘உட்கட்சி பூசலால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது,’’ என்று இம்மாநில முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.மத்திய பிரதேசத்தில் நடந்த மாவட்டம், மண்டல அளவிலான பாஜ உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் அக்கட்சியின் துணைத் தலைவர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர், ``உட்கட்சி பூசலால் மாநிலத்தில்  காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தால், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. பாஜ யாரையும் கட்சியில் இருந்து பிரிக்கவில்லை. ஆனால், மத்திய பிரதேசத்தில் தற்போது நடப்பது எதுவும் நன்றாக இல்லை. ஒரே நாடு; ஒரே தேர்தல் என்பதை மாநில  முதல்வராக இருந்த போதே வரவேற்றேன். நாட்டின் நலன் கருதி மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்கள் சேர்த்து நடத்தப்பட வேண்டும்,’’ என தெரிவித்தார்.




Tags : BJP ,government ,collapse ,Sivaraj Singh , Cong. , internal , over, BJP, Shivraj Singh Chauhan, talks
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...