சிட்னி விமான நிலைய கடையில் பர்ஸ் திருடியதாக புகார் ஏர் - இந்தியா விமானி சஸ்பெண்ட்

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலைய கடையில் பர்சு திருடியதாக ஏர்-இந்தியா விமானி மீது புகார் செய்யப்பட்டதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஏர் இந்தியா விமானம் சிட்னி விமான நிலையத்தில் இருந்து கடந்த 22ம் தேதி காலை 10,45 மணிக்கு  டெல்லி புறப்பட வேண்டும். அதற்கு முன் அதன் பைலட் ரோகித் பாசின், விமான நிலைய கடையில் பர்ஸ் வாங்கியுள்ளார். விமானத்துக்கு  செல் லும் அவசரத்தில் பணம் செலுத்தாமல் வந்துவிட்டார்.விமா னத்தில்  உட்கார்ந்ததும் அவ ருக்கு பணம் செலுத்தாதது பற்றி  ஞாபகம் வந்தது. மீண்டும் திரும்பிச் செல்ல முடியாததால் அவர் இந்தியா வந்து விட்டார்.

இது குறித்த புகாரின்  பேரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது குறித்து பைலட் ரோகித் பாசின் கூறுகையில், ‘‘நான் தாத்தாவான செய்தி சிட்னி விமான நிலையத்தில் இருக்கும் போது தெரிவிக்கப்பட்டது. அந்த மகிழ்ச்சியில் மருமகளுக்கு பரிசு வாங்க விமான நிலையத்தில் உள்ள கடைக்கு சென்றேன். பர்ஸ் ஒன்றை தேர்வு செய்தபின், விமானத்துக்கு செல்லும் அவசரத்தில் பணம் செலுத்தாமல் வந்து விட்டேன்’’ என்றார்.

Related Stories: