×

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியானது

சென்னை: மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால்டிக்ெகட்டுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நடத்தும் இந்த தேர்வு இந்த ஆண்டும் ஜூலை 7ம்  தேதி நடக்கிறது. இந்த தேர்வு எழுத நாடு முழுவதும் 8 லட்சத்து 17 ஆயிரத்து 892 பேர் முதல்தாள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இரண்டாம் தாள் தேர்வு எழுத 4 லட்சத்து 27 ஆயிரத்து 897 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில்,  இரண்டு தேர்வுகளையும் எழுத 8 லட்சத்து 38 ஆயிரத்து 381 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த  2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த இந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் நாடு முழுவதும் 16 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டுக்கான தகுதித் தேர்வு ஜூலை 7ம் தேதி 104 நகரங்களில் 2942 மையங்களில் நடக்கிறது.  இதையடுத்து, தகுதியுள்ள நபர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுத உள்ளவர்கள் தங்கள் விண்ணப்ப எண்கள், பிறந்த ேததி ஆகியவற்றை www.ctet.nic.in என்ற இணைய தளத்தில்  உள்ளீடு  செய்து தங்கள் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நடக்க உள்ள தகுதித் தேர்வில் தாள் ஒன்றுக்கான தேர்வு 2 மணி நேரம் நடக்கும். அதில் 150 கொள்குறி விடைக்கான கேள்விகள் இடம் பெறும். மேலும், குழந்தைகள் மேம்பாடு மற்றும் உளவியல், மொழி தாள் 1, மொழித்தாள் 2, கணக்கு,  சூழலியல், ஆகிய பாடப்பகுதிகளில் இருந்து தலா 30 கேள்விகள் இடம் பெறும். இரண்டாம் தாள் தேர்வு 2 மணி நேரம் நடக்கும். அதிலும் 150 கொள்குறி விடைக்கான கேள்விகள் இடம் பெறும். குழந்தைகள் மேம்பாடு மற்றும் உளவியல்,  மொழித்தாள் 1, மொழித்தாள் 2,கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் இருந்து தலா 30 கேள்விகள் இடம் பெறும். அவற்றில் கடைசி இரண்டு பாடப்பிரிவுகளில் தலா 60 கேள்விகள் இடம் பெறும்.


Tags : Central Teacher Eligibility Examination , Central Teacher, Eligibility ,Test
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...