×

மீனவர்களின் வாழ்வாதாரம் சிறக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கை: மீனவர்கள் 60 நாட்களாக மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் மீன்பிடித் தடைக்காலம் முடிந்த நிலையில் இப்போது மீன்பிடிக்கச் செல்கின்றனர். இந்நிலையில் ஒரு பக்கம் டீசல் விலையேற்றம் என்றால் மறுபக்கம் படகுகளை பதிவு செய்ய முடியாத நிலை. இச்சூழலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.

மீன்பிடித்தடைக்காலம் முடிந்தும் மீன்பிடிக்க செல்ல  முடியவில்லை என்றால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். ஆகவே படகுகளுக்கு பதிவு எண் வழங்கவும், படகுகள் கடலுக்குச் செல்லும் போது பாதுகாப்பு கொடுக்கவும், மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதுகாப்பாக, லாபகரமாக  நடைபெறுவதற்கும் பல்வேறு உதவிகள், சலுகைகளை வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மத்திய மாநில அரசுகள் மீனவர்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு அவற்றை நிறைவேற்றி மீனவர்களின்  வாழ்வாதாரம் சிறக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.Tags : Fishermen Needing Better Action ,GK Vasan , Livelihood,Fishermen, required, GK Vasan
× RELATED 50 நாளாக பறிபோன ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம்: பசியில் வாடுகிறார்கள்